பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் படங்களில் நடிப்பது மட்டுமின்றி, அவ்வப்போது தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ட்விட்டரில் பதிலளித்து வருகிறார். அதிலும் குறிப்பாக தான் பதிவிடும் ட்வீட்களின் எண்களை சரியாக நினைவு வைத்துக்கொண்டு, அவர் பதிவிடுவது அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. இதுதவிர அடிக்கடி தனது மகன், மகள் குறித்து பதிவு வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
அந்த வகையில் அமிதாப் பச்சனின் மகள் ஸ்வேதா பச்சன் சமீபத்தில், தானே வடிவமைத்த உடையை அணிந்து கொண்டு mxs பேஷன் ஷோவுக்குச் சென்றுள்ளார். ஜீன் கோட் அணிந்து கொண்டு, அதில் தனது அப்பா அமிதாப் பச்சனின் புகைப்படத்தை அதில் பதித்துள்ளார்.