தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியவர் ஸ்ரேயா கோஷல். இவரின் வசீகர குரலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் 2015ஆம் ஆண்டு ஷிலாதித்யாவைத் திருமணம் செய்துகொண்டார்.
தாய்மையடைந்த பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல் - ஸ்ரேயா கோஷல் கர்ப்பம்
பிரபல பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல் தான் தாய்மை அடைந்திருப்பதாக சமூகவலைதளம் வயிலாகத் தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்குப் பின்பும் ஸ்ரேயா கோஷல் தமிழில் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், டி. இமான், அனிருத் உள்ளிட்ட இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், தான் தாய்மை அடைந்திருப்பதாக ரசிகர்களுக்கு சமூகவலைதளம் வாயிலாக அறிவித்துள்ளார்.
அதில், "பேபி ஸ்ரேயாதித்யா வந்துகொண்டிருக்கிறார். உங்களுடன் இந்தச் செய்தியைப் பகிர்வதில் மகிழ்ச்சி, உங்கள் அனைவரின் அன்பும் தேவை" எனப் பதிவிட்டார். இதனையடுத்து சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலர் ஸ்ரேயா கோஷலுக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.