நாக கன்னியாக (நாகினி) நடிப்பது திரைத்துறையில் உள்ள பெரும்பாலான நடிகைகளின் கனவுகளில் ஒன்றாக இருக்கும். மறைந்த நடிகை ஸ்ரீதேவி முதல் பலரும் நாகினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இந்த வாய்ப்பு நடிகை ஷ்ரதா கபூரை தேடி வந்துள்ளது.
நாகினி ஆகிறார் ஷ்ரதா கபூர்! - naagin
பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரதா கபூர், ‘நாகினி’ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
விஷால் ஃபரியா இயக்கும் நாகினி சீரிஸில் ஷ்ரதா கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த சீரிஸை நிகில் திவேதி தயாரிக்கவுள்ளார். பிரபல சினிமா ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் இதனை உறுதிபடுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஷ்ரதா, நாகினி கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன். நான் ஸ்ரீதேவி அவர்களின் நடிப்பை பார்த்து வளர்ந்தவள். அவரது நாகினி கதாபாத்திரங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. சிறு வயது முதலே அதனை மிகவும் ரசித்திருக்கிறேன். இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசையாக இருந்தது. தற்போது அந்த ஆசை நிறைவேறியுள்ளது என தெரிவித்துள்ளார்.