உங்களால் நான்... இன்ஸ்டாவில் '50 மில்லியன்' டைம்ஸ் நன்றி கூறிய ஷ்ரத்தா கபூர் - ஷ்ரத்தா கபூர் படங்கள்
புதுடெல்லி: பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் சமூக வலைதளப் பக்கமான இன்ஸ்டாகிராமில் 50 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பின்தொடர்வதை அடுத்து அவர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.
![உங்களால் நான்... இன்ஸ்டாவில் '50 மில்லியன்' டைம்ஸ் நன்றி கூறிய ஷ்ரத்தா கபூர் ஷ்ரத்தா கபூர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-02:29:34:1594889974-shk-1607newsroom-1594884610-405.jpg)
பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஷ்ரத்தா கபூர். இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்பற்றப்படும் இந்தியப் பிரபலங்களில் இவரும் ஒருவர். தனது மனதில் உள்ள கருத்துக்களையும், தனது தொழில் வாழ்க்கை முறையைக் குறித்தும் ஷ்ரத்தா கபூர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு ரசிகர்களை தன்பக்கம் வைத்துள்ளார்.
இதனையடுத்து இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 50 மில்லியனுக்கும் அதிகமாகியுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஷ்ரத்தா கபூர் நன்றி கடிதம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், எனது அன்பான இனிமையான ரத்தினங்களான ரசிகர்களான நலம் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி. நீங்கள் இவ்வளவு அன்புடன் செய்த பதிவுகள், வீடியோக்கள், கருத்துக்கள் வழியாக நான் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன்.