கரோனா பரவலைத் தடுக்க மருத்துவர்களும், சுகாதாரப் பணியாளர்களும் முதல் வரிசை வீரர்களாக களத்தில் போராடி வரும் நிலையில், இறந்த மருத்துவர்களின் உடல்களை புதைக்க அனுமதிக்காமல் மக்கள் போராடும் செய்திகளும், சுகாதாரப் பணியாளர்கள் தாக்கப்படும் வேதனைக்குரிய செய்திகளும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகை ஷில்பா ஷெட்டி காணொலி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
அதில், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்களின் தன்னலமற்ற வேலைகளைக் கருத்தில் கொண்டு ஒரு நிமிடம் காணொலியைப் பார்க்குமாறு ஆரம்பத்தில் கோரிக்கை விடுக்கும் ஷில்பா, எந்தவித காரணங்களுக்காகவும் மருத்துவர்கள் , சுகாதார ஆய்வாளர்கள் மீதான வன்முறைகளை ஊக்குவிக்காமல் உரிய மரியாடையுடன் அவர்களை நடத்தக்கோரி கோரிக்கை விடுத்துள்ளார்.