மும்பை: ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் பாடிகான் உடையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பழமைவாதத்தை உடைக்கும் நேரமிது என பதிவிட்டுள்ளார்.
பழமைவாதத்தை உடைக்கும் நேரமிது: ஷில்பா ஷெட்டி - nikkama
கோவாவில் பாடிகான் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த ஷில்பா ஷெட்டி, பழமைவாதத்தை உடைக்கும் நேரமிது என குறிப்பிட்டுள்ளார்.
தனது படப்பிடிப்பு பணிகளை முடித்த ஷில்பா, விடுமுறையைக் கொண்டாட கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பாடிகான் உடை அணிந்து அவர் புகைப்படம் எடுத்துள்ளார். அந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த அவர், பழமைவாதத்தை உடைத்தெறியும் மனநிலையில் இருக்கிறேன். அதனால் வார இறுதிபோல் இந்த புதன் கிழமையைக் கொண்டாடுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
ஷில்பா ஷெட்டி 13 ஆண்டுகளுக்கு பிறகு முன்னணி கதாபாத்திரம் ஏற்றுள்ள ‘ஹங்கமா 2’, ‘நிக்கமா’ ஆகிய இரு படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன. அவர் கடைசியாக 2007ஆம் ஆண்டு ‘லைஃப் இன் ஏ மெட்ரோ’, ‘அப்னே’ ஆகிய படங்களில் நடித்திருந்தார்.