தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விஷ்ணுவர்தன் இயக்கும் 'ஷெர்ஷா' - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு - விஷ்ணுவர்தன் இயக்கும் ஷெர்ஷா

விஷ்ணுவர்தன் இந்தியில் இயக்கும் 'ஷெர்ஷா' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

Shershaah
Shershaah

By

Published : Jan 16, 2020, 1:08 PM IST

அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் பாலிவுட்டில் அறிமுகமாகும் படம் 'ஷெர்ஷா'.

கார்கில் போரையும், போரில் நாட்டுக்காக உயிர்நீத்து வீர மரணமடைந்த இளம் வீரர் கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கை வரலாற்றையும் மையமாக வைத்து உருவாகி வரும் 'ஷெர்ஷா' படத்தில் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா, விக்ரம் பத்ரா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

விஷ்ணுவர்தன் - சித்தார்த் மல்ஹோத்ரா

எம்.எஸ்.தோனி படப்புகழ் கைரா அத்வானி, ஜாவெத் ஜெஃப்ரி, ஹிமான்ஷு மல்ஹோத்ரா, பரேஷ் ராவல் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தனது 24ஆம் வயதில் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வீர தீர செயல்களைப் பாராட்டி அவரது மறைவுக்குப் பிறகு இந்திய அரசு பரம் வீர் சக்ரா விருது வழங்கி கெளரவித்தது.

கேப்டன் விக்ரம் பத்ரா

விக்ரம் பத்ராவை நினைவுகூரும் வகையில் தற்போது அவரது வாழ்க்கைத் திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்தப்படத்தை கரன் ஜோஹர், ஹிரூ ஜோஹர், அபூர்வா மேத்தா, ஷப்பீர் பாக்ஸ்வாலா, அஜய் ஷா மற்றம் ஹிமான்ஷு காந்தி ஆகியோர் தயாரிக்கின்றனர்.

கடந்த ஆண்டு மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் லடாக், காஷ்மீர், சண்டிகர் உள்ளிட்ட இடங்களில் தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த 12ஆம் தேதி படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், சித்தார்த் மல்ஹோத்ராவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களைப் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

ஜுலை மாதம் 3ஆம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதால் விரைவில் இதன் இறுதி கட்டப் பணிகள் தொடங்கும் என படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க...

எவ்வளவு சம்பாதித்தாலும் விவசாயத்தை விடக்கூடாது - நடிகர் கார்த்தி

ABOUT THE AUTHOR

...view details