இயக்குநர் ஷங்கர் தற்போது கமலை வைத்து 'இந்தியன் 2' படத்தை இயக்கிவந்தார். ஆனால் கரோனா பாதிப்பு படப்பிடிப்பில் விபத்து உள்ளிட்ட காரணங்களால் அப்படியே கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனை அடுத்து தெலுங்கில் ராம் சரணை வைத்து புதிய படத்தை இயக்கும் வேலைகளில் பிஸியாக உள்ளார். தில் ராஜு தயாரிக்கும் 50ஆவது படமாக இது உருவாகிறது.
இந்தப் படங்களைத் தொடர்ந்து ஷங்கர் ரன்வீர் சிங் நடிக்கும் இந்தி படமொன்றை இயக்கவுள்ளார். இதற்கான பேச்சுவார்த்தை தற்போது மும்முரமாக நடைபெற்றுவருகிறது. ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், சதா, விவேக் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'அந்நியன்' படத்தின் இந்தி ரீமேக் எடுக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.