விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட மூதாட்டி ஒருவரை, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட பில்கிஸ் பானு என வதந்தி பரப்பி ட்வீட் செய்தார். பஞ்சாப் பாடகர் டில்ஜித் தோசஞ் இது தொடர்பாக கங்கனாவை சாடி பதிவிட்டிருந்தார். தற்போது டில்ஜித் தோசஞ் உடன் கைகோர்த்து கங்கனாவை சாடியுள்ளார் மிகா சிங்.
விவசாயிகள் போராட்டம் - டில்ஜித் தோசஞ் உடன் கைகோர்த்து கங்கனாவை சாடும் மிகா சிங்! - diljit kangana controversy
எனக்கு கங்கனா மீது மிகுந்த மரியாதை உள்ளது. அவர் அலுவலகம் அரசாங்கத்தால் இடித்து நொறுக்கப்பட்டபோது கூட அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தேன். ஆனால், அது தவறு என இப்போது உணர்கிறேன்.
Mika Singh to Kangana Ranaut
இதுகுறித்து மிகா சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், எனக்கு கங்கனா மீது மிகுந்த மரியாதை உள்ளது. அவர் அலுவலகம் அரசாங்கத்தால் இடித்து நொறுக்கப்பட்டபோது கூட அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தேன். ஆனால், அது தவறு என இப்போது உணர்கிறேன். கங்கனா, பெண்ணான நீங்கள் ஒரு மூதாட்டிக்கு மரியாதை அளிக்க வேண்டும். உங்களுக்கு சமுதாய ஒழுங்குமுறை பற்றி தெரிந்திருந்தால், அவரிடம் மன்னிப்பு கேளுங்கள். உங்களை செயலை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.