தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

டிஜிட்டலில் வெளியாகும் வித்யாபாலனின் 'சகுந்தலா தேவி' - சகுந்தலா தேவி திரைப்படம்

அமிதாப் பச்சன் நடிப்பில் உருவாகியுள்ள 'குலோபோ சிதாபோ' திரைப்படத்தைத் தொடர்ந்து, வித்யா பாலன் நடிப்பில் உருவாகியுள்ள 'சகுந்தலா தேவி' திரைப்படமும் டிஜிட்டலில் வெளியாவது உறுதியாகியுள்ளது.

vidya balan
vidya balan

By

Published : May 15, 2020, 12:19 PM IST

பெங்களூருவைச் சேர்ந்தவர் சகுந்தலா தேவி. சிறு வயதிலேயே தானாகக் கணக்குகளைத் தீர்க்கப் பழகிக் கொண்டவர். பழைய நூற்றாண்டின் தேதியைச் சொன்னாலும் கூட உடனே அதன் கிழமையைச் சொல்லி விடும் அளவுக்கு கணக்கில் அவர் கில்லாடி. சிக்கலான கணக்குகளையும் உடனே தீர்த்து விடுவார்.

இவரது இந்த அதீத திறன் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. வேகமான 'மனிதக் கணினி' ஆக இருந்தவர் 2013ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இதனையடுத்து தற்போது இவரது வாழ்க்கைக் கதை சினிமாவாகிறது. சகுந்தலா தேவியாக வித்யாபாலன் நடிக்கிறார். ரோனிஸ்குருவாலா தயாரிக்கும் இப்படத்தை அனு மேனன் இயக்குகிறார்.

படத்தை 2020ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது கரோனா அச்சம் காரணமாக படத்தைத் திரையரங்கில் வெளியிட முடியவில்லை. இந்நிலையில் படக்குழு 'சகுந்தலா தேவி' படத்தை டிஜிட்டல் தளமான OTTஇல் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதனையடுத்து இப்படத்தை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது. வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே அமிதாப் பச்சன், ஆயுஷ்மன் குரானா நடிப்பில் உருவாகியுள்ள 'குலோபோ சிதாபோ' திரைப்படம் OTTயில் ஜூன் 12ஆம் தேதி வெளியாவது உறுதியான நிலையில், தற்போது இப்படமும் வெளியாகிறது.

ABOUT THE AUTHOR

...view details