பிரபல பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர், விஜய் சேதுபதி இருவரும் ராஜ் நிதிமோரு, கிருஷ்ணா டி.கே இணைந்து இயக்கும் ஓடிடி வெப் சீரிஸில் நடிக்க உள்ளனர். இந்த சீரிஸ் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் தனது நடிப்பில் வெளிவர இருக்கும் 'ஜெர்ஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில், ஆக்சன் த்ரில்லராக உருவாக இருக்கும் இந்த வெப் சீரிஸில் ஷாஹித் கவனம் செலுத்த உள்ளார்.
இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்கி நடைபெற உள்ளது. மும்பை, கோவா உள்ளிட்ட இடங்களில் பெயரிப்படாத இந்த சீரிஸின் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இதில் நடிகர் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். பான் இந்தியா சீரிஸாக இத்தொடர் உருவாகவுள்ள நிலையில், ஷாஹித் கபூரும் விஜய் சேதுபதியும் பெரும் தொகையை சம்பளமாகப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க... 'மாமனிதன்' படத்திற்கான தடை நீங்கியது!