ஹைதராபாத்:இயக்குநர்கள் ராஜ் - டிகே காம்போவில் உருவாகிவரும் வெப்சீரிஸுக்கு ‘கவர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதி, சாஹித் கபூர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
விஜய் சேதுபதியின் வெப் சீரிஸ் பெயர் 'கவர்’ - சாஹித் கபூர்
விஜய் சேதுபதி, சாஹித் கபூர் இணைந்து நடிக்கும் இந்தி வெப் சீரிஸுக்கு ‘கவர்’ (படிக்காதவன்) என பெயரிடப்பட்டுள்ளது.
Shahid Kapoor and Vijay Sethupathi
’கோ கோவா கான்’ படத்தின் மூலம் பிரபலமாக அறியப்படும் இயக்குநர்கள் ராஜ் நிதுமோரும், கிருஷ்ணா டிகேவும் இதை த்ரில்லர் ரகத்தில் உருவாக்கவுள்ளனர். அமேசான் ப்ரைமில் இந்த சீரிஸ் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் இதன் படப்பிடிப்பில் சாஹித் கபூர் கலந்துகொள்ள இருக்கிறார். விஜய் சேதுபதியின் ஷூட்டிங் குறித்த தகவல் இல்லை.ஆனால், இவர்கள் இருவரையும் இதுவரை பார்க்காத வித்தியாசமான தோற்றத்தில் பார்க்கலாம் என படக்குழு உறுதியளித்துள்ளது.