தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அப்ராம்ஸ் உன்னை நினைக்கையில் பெருமையாக உள்ளது - ஷாருக்கானின் வைரல் ட்வீட் - டேக்வாண்டோ தற்காப்பு கலையில் சாதித்த அப்ராம்ஸ்

இளையமகன் அப்ராம்ஸ் டேக்வாண்டோ என்னும் தற்காப்பு கலை போட்டியில் கலந்துக்கொண்டு பதக்கம் வென்றது மகிழ்சியாக இருப்பதாக ஷாருக்கான் கூறியுள்ளார்.

SRK
SRK

By

Published : Feb 10, 2020, 6:35 PM IST

உலகம் முழுவதும் தனக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் பாலிவுட் பாஷா நடிகர் ஷாருக்கான். 2018ஆம் ஆண்டு வெளியான ஜீரோ படம் படுதோல்வியடைந்தது. ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் தயாராகி, பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகி அப்படியே திரையரங்குகளை விட்டு வெளியேறியது.

இந்த நிலையில், ஷாருக்கான் 2019ஆம் ஆண்டு ஒரு படத்திற்கும் கால்ஷீட் கொடுக்கமால் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவழித்தும் சின்னத்திரை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்று வருகிறார். இந்த வருடம் இயக்குநர் அட்லி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக இணையத்தில் செய்திகள் உலாவருகின்றன. தற்போது ஷாருக்கானின் இளையமகன் அப்ராம்ஸ் டேக்வாண்டோ என்னும் தற்காப்பு கலை போட்டியில் கலந்துக்கொண்டு பதக்கம் வென்றுள்ளார்.

இந்த புகைப்படத்தை ஷாருக்கான் தனது சமூகவலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் அவர் கூறுகையில், நீ பயிற்சி பெற்றாய். போட்டியில் கலந்துக்கொண்டு சண்டை செய்தாய். இப்போது அதில் வெற்றி பெற்றுள்ளாய். இதை மீண்டும் செய். இதை பார்கையில் எனது மகன் என்னை விட நிறைய விருதுகளை பெறுவான் என நினைக்கிறேன். இது நல்ல விஷயம். இனி நான் அதிகமாக பயிற்சி எடுக்க வேண்டும். உன்னை நினைத்து எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது என அதில் கூறியுள்ளார். ஷாருக்கானின் இந்த பதிவு தற்போது சமூகவலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இதையும் வாசிங்க: தேசியளவு டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்: முதலமைச்சர் வாழ்த்து

ABOUT THE AUTHOR

...view details