தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஷாருக்கானை இயக்கும் மாதவன்! - மாதவன் இயக்கத்தில் நடிக்கும் ஷாருக்கான்

நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நடிகர் ஷாருக்கான் நடிக்கிறார். அவர் நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Shah Rukh Khan to feature in madhavan directorial Rocketry
Shah Rukh Khan to feature in madhavan directorial Rocketry

By

Published : Jun 6, 2020, 11:06 PM IST

அண்மையில் தனது ஹீரோ திரைப்படத்தில் பார்க்கப்பட்ட பாலிவுட்டின் கிங் கான் ஷாருக்கான் தற்போது நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமாகும் 'ராக்கெட்ரி: த நம்பி எஃபெக்ட்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதைத்தொடர்ந்து அயன் முகர்ஜியின் இயக்கத்தில் பிரம்மாஸ்திரா திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

'ராக்கெட்ரி: த நம்பி எஃபெக்ட்' திரைப்படத்தில் ஷாருக்கான் செய்தியாளராக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படம் பத்மபூஷன் விருது பெற்ற இந்திய விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை தழுவிய படமாகும்.

'ராக்கெட்ரி: த நம்பி எஃபெக்ட்', 'பிரம்மாஸ்திரா' திரைப்படங்களில் சில காட்சிகளில் ஷாருக்கான் ஏற்கனவே நடித்துள்ளார். இந்தப் படங்களில் ஷாருக்கானை காண அவரது ரசிகர்கள் வெறிகொண்டு காத்திருக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details