தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சர்ச்சையில் சிக்கிய பிரபல பாடகி... விளம்பரத்திற்காக இப்படியா புகைப்படம் எடுப்பிங்க! - புத்தகம் மீது ஷூ அணிந்து போஸ் கொடுத்த செலினா

பிரபல பாடகி செலினா கோமஸ், பூமா விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட ஃபோட்டோஷூட்டால் பெரும் சர்சையில் சிக்கியுள்ளார்.

selena gomez
செலினா

By

Published : Nov 30, 2019, 8:56 AM IST

சிறு வயதிலிருந்து புத்தகத்தை கடவுளுக்கு சம்மாக தான் மக்கள் பார்த்துவருகிறார்கள். சிறப்பு பூஜைகளில் புத்தகங்களை வைத்து சாமி கும்பிடுவதும் பல தரப்பு மக்கள் வாடிக்கையாக வைத்துள்ளார்கள்.

ஆனால், அமெரிக்காவின் பிரபல பாடகி செலினா கோமஸ், தனியார் நிறுவன விளம்பரத்திற்காக புத்தகத்தை அவமரியாதை செய்த காரியத்தால் தற்போது சர்சையில் சிக்கியுள்ளார்.

பூமா நிறுவனத்தின் புதிய ஷூ விளம்பரத்திற்காக, செலினா புத்தகங்கள் இருக்கும் ரேக் அருகில் போஸ் கொடுக்கும் போது, கீழே இருக்கும் புத்தகத்தின் மீது ஷீ அணிந்து கொண்டு நிற்பார். இந்த புகைப்படத்தால் தற்போது வசமாக சிக்கி கொண்டார். இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பலர தரப்பு மக்கள் கண்டித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: திருமணம் செய்யக் கோரிக்கை விடுத்த ரசிகர்! குறும்பாய் பதிலளித்த பூமி பெட்னேக்கர்!

ABOUT THE AUTHOR

...view details