தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

காசிக்குச் சென்ற சாரா அலிகான்: கோபத்தில் உள்ளூர்வாசிகளும் பூசாரிகளும் - சாரா அலிகான் கோயில் தரிசனம்

காசி விஸ்வநாதர் கோயிலில் இந்து மதத்தைச் சாராதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடைசெய்யப்பட்டிருந்தபோதும் சாரா அலிகானின் வரவு பாதுகாப்பு குறித்து கேள்வி எழுவதாக அப்பகுதியினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

Sara Ali Khan
Sara Ali Khan

By

Published : Mar 19, 2020, 8:47 AM IST

நடிகை சாரா அலிகான் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வருகைதந்தது அங்கிருக்கும் பூசாரிகளுக்குப் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகை சாரா அலிகான் சமீபத்தில் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தார். பின் கங்கைக்குச் சென்று ஆரத்தி வழிபாட்டிலும் கலந்துகொண்டார். இவரின் இந்தச் செயல் அங்கிருந்த இந்துக்களிடையேயும் பூசாரிகளுக்கிடையேயும் பெரும் கோபத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது.

இது குறித்து உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில், "சாரா அலிகான் அடிப்படையில் இந்து அல்லாதவர். அவர் இங்கு வந்து சாமி தரிசனம்செய்தது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரின் இந்த வரவு கோயிலின் மரபு, விதிமுறைகளுக்கு எதிரானது. இந்து மதத்தைச் சாராதவர்கள் கோயிலுக்குள் நுழைவது தடைசெய்யப்பட்டிருந்தபோதும் இவரின் வருகை பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்புகிறது" என்றார்.

இவரைத் தொடர்ந்து கோயில் பூசாரி ராகேஷ் கூறுகையில், "காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று கங்கா ஆரத்தி வழிபாட்டில் கலந்துகொண்ட சாரா அலிகானின் ஆர்வத்தை நாங்கள் பாராட்டுகிறோம்.

ஆனால் அவர் அடிப்படையில் இஸ்லாமியராக இருப்பதால் இதுபோன்ற சடங்கில் பங்கேற்பதைத் தவிர்த்திருக்கலாம். அவருக்கு இது உற்சாகமாகவும் சுவாரஸ்யமானதாகவும் இருக்கலாம். எங்களுக்கு இது மத விவகாரமாகும்" என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details