மறைந்த நடிகர் சுனில் தத்தின் 91ஆம் பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும் அவரை நினைவு கூரும் வகையிலும், அவரது பழைய கருப்பு-வெள்ளை புகைப்படம் ஒன்றை அவரது மகனும் நடிகருமான நடிகர் சஞ்சய் தத் பகிர்ந்துள்ளார்.
புன்சிரிப்புடன் இருக்கும் தனது தந்தையுடன் தான் இருக்கும் புகைப்படத்தை சஞ்சய் தத் பகிர்ந்து 'என் மகிழ்ச்சிக்கும் வலிமைக்கும் ஆதாரமாய் நீங்கள் இருந்துள்ளீர்கள். பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா.' என்று சஞ்சய் தத் நெகிழ்வுடன் பதிவு செய்திருந்தார்.