தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'ரோலர் கோஸ்டர் பயணத்திற்கு தயாராகு சஞ்சய்' - பரேஷ் கெலானி உருக்கம் - பரேஷ் கெலானி

மும்பை: நடிகர் சஞ்சய் தத்தின் நெருங்கிய நண்பரான பரேஷ் கெலானி, உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

சஞ்சய் தத்
சஞ்சய் தத்

By

Published : Aug 18, 2020, 5:02 AM IST

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மருத்துவ காரணங்களுக்காக திரையுலகிலிருந்து சிலகாலம் விலகுவதாக ஆகஸ்ட் 11ஆம் தேதி அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து மூன்றாம் கட்ட நுரையீரல் புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதாக அதிகாரப்பூர்வ தகவலும் வெளியானது.

இதையடுத்து, இவர் சிகிச்சையில் இருந்து மீண்டு வர பாலிவுட் பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் சமூக வலைதளத்தில் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இதற்கிடையில், சஞ்சய் தத்தின் நீண்டகால நண்பரான பரேஷ் கெலானி உருக்கமான கடிதம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது, "சஞ்சய், நாம் வாழ்வில் அடுத்தக்கட்டத்தை எவ்வாறு அனுபவிக்க போகிறோம் என்றும் எப்படி நாம் நடக்கவும் ஓடவும் பாயவும் ஆசீர்வதிக்கப்பட்ட இருந்தோம் என்பதை பற்றிய சில நாட்களுக்கு முன்பு பேசிக்கொண்டிருந்ததை நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது. நாம் ஆசிர்வதிக்கப் பட்டிருக்கிறோம். எதிர்கால பயணம் அழகானதாகவும் வண்ணமயமானதாகவும் இருக்கப்போகிறது என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.

கடவுள் கருணை மிக்கவர். நாம் விளையாட இந்த பொழுதுபோக்கு பூங்கா மூடப்பட்டுவிட்டது என்று நினைத்தோம். ஆனால், அப்படியில்லை என நினைக்கிறேன். இன்னொரு ரோலர் கோஸ்டர் பயணத்திற்கு தயாராவோம். அது நீ வெற்றிபெற போகிற யுத்தம்" என்று கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details