லகான், ஸ்வதேஸ், ஜோதா அக்பர் திரைப்படங்களை இயக்கிய அசுதோஷ் கௌரிகர் இயக்கத்தில், அர்ஜூன் கபூர், சஞ்சய் தத், க்ரிதி சானன் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில், பெரும் பொருட்செலவில் உருவாகி வந்த 'பானிபட்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
மூன்று நிமிடங்கள் நாற்பது விநாடிகள் வரை ஓடும் இந்த ட்ரெய்லரை 'அர்ஜூன் கபூர்', தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 1761ஆம் ஆண்டில் நடைபெற்ற மூன்றாம் பானிபட் போரை, மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்திற்கு அஜய் அதுல் இசையமத்துள்ளனர்.
இந்தியாவில் ஆட்சி பீடத்தில் மராத்தியர்கள் கோலோச்சியிருந்த காலத்தை மையமாகக் கொண்ட இந்த வரலாற்றுப் படத்தில், சதாஷிவ் ராவ் பேஷ்வாவாக அர்ஜூன் கபூரும், அவரது மனைவி பார்வதி பாயாக க்ரிதி சானனும், இந்தியாவில் படையெடுக்க உட்புகும் ஆஃப்கானிய மன்னன் அஹமத் ஷா அப்தாலியாக சஞ்சய் தத்தும் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.