பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மூச்சுத் திணறல் காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (ஆகஸ்ட் 8) மாலை அவருக்கு சுவாச சிக்கல் ஏற்பட்டதாகவும், மார்புப் பகுதியில் வலி ஏற்பட்டதாகவும் கூறப்பட்ட நிலையில், மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ரேபிட் டெஸ்டில் அவருக்கு கரோனா தொற்று இல்லை என முடிவு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு மூச்சுத் திணறல்; மருத்துவமனையில் அனுமதி - Sanjay Dutt lelavathi hospital
மூச்சுத் திணறல் காரணமாக பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
sanjay
1993ஆம் மும்பை தொடர் குண்டுவெடிப்பில் சஞ்சய் தத்துக்கு தொடர்பு இருந்ததாகக் கூறி அவர் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டார். நிழலுலக தாதாவுடன் தொடர்பிலிருந்ததாகவும் இவர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இவருடைய வீட்டிலிருந்து சட்ட விரோதமாக ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் காரணமாக 42 மாதங்கள் சிறைவாசத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அவதூறு பரப்பிய பாஜக எம்பியிடம் ரூ.100 கோடி கேட்கும் ஜார்க்கண்ட் முதலமைச்சர்!
Last Updated : Aug 9, 2020, 6:37 AM IST