தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

போதைப்பொருள் வழக்கு: விவேக் ஓபராய் சகோதரர் வீட்டில் சோதனை! - விவேக் ஓபராய் சகோதரர்

பெங்களூரு: கன்னட திரையுலக போதைப்பொருள் வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு நடிகர் விவேக் ஓபராய் சகோதரர் ஆதித்யா அல்வாவின் வீட்டில் சோதனை நடத்தினர்.

விவேக் ஓபராய் சகோதரர் வீட்டில் சோதனை
விவேக் ஓபராய் சகோதரர் வீட்டில் சோதனை

By

Published : Sep 15, 2020, 2:07 PM IST

கன்னட திரையுலகில் போதைப்பொருள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய குற்றப்பிரிவு அலுவலர்கள் (சிசிபி) விசாரணை நடத்திவருகின்றனர்.
இது குறித்து ஏற்கனவே கன்னட திரைப்பட நடிகைகள் ராகினி திவேதி, நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், ராகினியின் போலீஸ் கஸ்டடி முடிவடைந்த நிலையில் ராகினி உள்ளிட்ட உள்பட ஐந்து பேரை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க நகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் சஞ்சனா கல்ராணியின் போலீஸ் ரிமாண்டை மூன்று நாள்கள் நீட்டித்தது.
இந்நிலையில், இன்று (செப்.15) மத்திய குற்றப்பிரிவு அலுவலர்கள் முன்னாள் அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மகனும் விவேக் ஓபராய் சகோதரருமான ஆதித்யா அல்வாவின் வீட்டில் சோதனை நடத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details