தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

105 கிலோ எடை, மனச்சோர்வு - சமீராவின் ’அன்னையர் தின’ பகிர்வு - சமீரா ரெட்டி

என் மகனை ஈன்றெடுத்த பின்பும் நான் நிம்மதியாக இல்லை. மகப்பேறுக்கு பிறகான மனச்சோர்வு என்னை ஆட்கொண்டது. என் கணவர்தான் குழந்தை வளர்ப்பில் அனைத்து உதவிகளையும் செய்தார்.

Sameera Reddy
Sameera Reddy

By

Published : May 10, 2021, 5:03 PM IST

ஹைதராபாத்: சமீரா ரெட்டி தனது முதல் குழந்தை பிறந்தபோது கிடைத்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

திருமணத்துக்கு பிறகு திரைத்துறைக்கு முழுக்கு போட்டார் நடிகை சமீரா. அவருக்கு ஹன்ஸ் என்ற மகனும், நைரா என்ற மகளும் உள்ளனர். முதலாவது குழந்தை பிறந்தபோது தனது எடை 105 கிலோவுக்கு சென்றது குறித்தும், அதனால் ஏற்பட்ட மனச்சோர்வில் இருந்து தான் மீண்டது குறித்தும் சமீரா பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர், என் மகன் ஹன்ஸ் வயிற்றில் இருந்தபோது, தாய்மை அடைவது எளிதான காரியம் என்ற எண்ணம் அடியோடு மாறிப்போனது. தாய்மை குறித்த என் பார்வை வேறு விதமாக இருந்தது. 9ஆவது மாதத்தில் எனது எடை 105 கிலோவாக இருந்தது. என் மகனை ஈன்றெடுத்த பின்பும் நான் நிம்மதியாக இல்லை. மகப்பேறுக்கு பிறகான மனச்சோர்வு என்னை ஆட்கொண்டது. என் கணவர்தான் குழந்தை வளர்ப்பில் அனைத்து உதவிகளையும் செய்தார்.

உன் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது. உன் கணவன் உனக்கு உறுதுணையாக இருக்கிறார். பிறகு ஏன் நீ கவலையுடன் இருக்கிறாய் என என் மாமியார் கேட்டார். என்னிடம் பதில் இல்லை. அழுகையாக வந்தது, எனக்கு முடி கொட்ட ஆரம்பித்தது. பிறகு என் பிரச்னை மோசமானது என்பதை புரிந்து கொண்டேன். ஹோமியோபதி மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை எடுத்துக் கொண்டேன். இறுதியில் புதிதாகப் பிறந்தது போல் உணர்ந்தேன். என்ன நடந்தாலும் உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருக்க வேண்டியது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details