பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜூன் மாதம் 14 ஆம் தேதி மும்பையில் தற்கொலை செய்து கொண்டார். முதலில் வெறுமனே தற்கொலையாக பார்க்கப்பட்ட இந்த வழக்கு தொடர் விசாரணையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்புடைய வழக்காக மாறியது.
இது தொடர்பான விசாரணையில் சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரபோர்த்தி, அவரது சகோதரர் சோவிக் சக்ரபோர்த்திக்கும் போதைப் பொருள் விற்பனை கும்பலுடன் தொடர்பு இருந்தது தெரிய வந்ததது.
ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பாலிவுட் நடிகைகளுக்கு சமந்தா ஆறுதல்! - போதைப் பொருள் வழக்கு
சென்னை: போதைப் பொருள் பட்டியலில் தவறுதலாக இடம் பெற்ற ரகுல் ப்ரீத் சிங்க்கு சமந்தா ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மத்திய போதைப் பொருள் தடுப்பு துறையினர் தனி வழக்குப்பதிவு செய்து ரியா சக்ரபோர்த்தி, சோவிக் சக்ரபோர்த்தி உள்பட ஒன்பது பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள் வாங்கியவர்கள் என சிலரை ரியா சக்ரபோர்த்தி கூறியுள்ளார். அந்தப் பட்டியலில் ரகுல் ப்ரீத் சிங், சாரா உள்ளிட்ட இருபதிற்கும் மேற்பட்ட நடிகர் நடிகைகள் இடம்பெற்று இருந்ததாகக் கூறப்பட்டது.
இந்தத் தகவல்களில் உண்மை இல்லை என்று காவல்துறையினர் மறுத்துள்ள நிலையில், போதைப் பொருள் பட்டியலில் தவறுதலாக இடம் பெற்ற நடிகர், நடிகைகளுக்கு பலரும் ஆறுதல் மற்றும் வருத்தத்தை சமூக வலைத்தளங்களில் சினிமா பிரபலங்கள் பதிவு செய்து வருகின்றனர் .
அந்த வகையில் சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் ரகுல் ப்ரீத், சாரா அலிகானுக்கு தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.
அந்தப் பதிவில் சமந்தா, “#SorryRakul, #SorrySara” எனப் பதிவிட்டுள்ளார்.