தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சூப்பர் போலீஸாக வரும் 'சுல்புல் பாண்டே'... அனிமேஷனில் கலக்க இருக்கும் 'தபாங்' - அனிமேஷன் தொடராக வெளியாகும் தபாங்

சல்மான் கான் நடிப்பில் வெளியான 'தபாங்' திரைப்படம் தற்போது அனிமேஷன் தொடராக வெளியாக இருக்கிறது.

salaman
salaman

By

Published : May 28, 2020, 9:44 AM IST

பாலிவுட்டில் 2010ஆம் ஆண்டு அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிகர் சல்மான் கான் நடிப்பில் வெளியான படம் 'தபாங்'. இப்படம் அப்போது பெரும் வெற்றியை பெற்றது. இதனையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகமான 'தபாங் 2' படத்தை அர்பாஸ் கான் இயக்கினார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் இப்படத்தின் 3ஆம் பாகமான 'தபாங் 3' வெளியானது. இந்த படத்தை பிரபுதேவா இயக்கினார். பாலிவுட்டின் மிகப்பெரிய பொழுதுபோக்கு படங்களில் ஒன்றான இப்படம் தற்போது அனிமேஷன் தொடராக இயக்கும் முயற்சியில் அனிமேஷன் நிறுவனமான காஸ்மோஸ் இறங்கியுள்ளது. அதற்கான உரிமையையும் அந்நிறுவனம் பெற்றுள்ளது.

இந்தத் தொடரில் சூப்பர் போலீஸாக சுல்புல் பாண்டே (சல்மான் கான்), சேடி சிங் (சோனு சூட்) ராஜ்ஜோ ( சோனாக்ஷி சின்ஹா) உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த தொடரின் அனிமேஷன் உரிமையை கோமோஸ் - மாயா நிறுவனம் வாங்கியுள்ளது.

இது குறித்து 'தபாங்' சீரிஸ் படத்தின் தயாரிப்பாளரும் சல்மான் கானின் சகோதாருமான அர்பாஸ் கான் கூறுகையில், " 'தபாங்' திரைப்படம் வெற்றி பெற மிக முக்கிய காரணம். இது முழுமையாக குடும்பங்களுடன் கொண்டாடும் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படம். இந்த படத்தை தற்போது அனிமேஷன் மூலமாக இந்த கதாபாத்திரங்களின் கதையும் இன்னும் கிரியேட்டிவாக நாம் சொல்ல முடியும்.

சுல்புல் பாண்டேவின் சாகசங்கள் அனிமேஷனில் நாம் பார்த்திராத வகையில் சூப்பர் ஹீரோவாக சித்தரிக்கப்படும். அனிமேஷனுக்கு தொடருக்கு நாம் இணையற்ற படைப்பாற்றல் இருப்பதால் இப்படம் மக்களை வெகுவாக கவரும் என நம்புகிறேன்" என்று கூறினார்.

இதையும் படிங்க: சகோதரத்துவத்தை வலியுறுத்தும் சல்மான் கானின் 'பாய் பாய்' பாடல்!

ABOUT THE AUTHOR

...view details