பாலிவுட்டில் 2010ஆம் ஆண்டு அபினவ் காஷ்யப் இயக்கத்தில் நடிகர் சல்மான்கான் நடிப்பில் வெளியான படம் 'தபாங்'. இப்படம் அப்போது பெரும் வெற்றிபெற்றது. இதனையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகமான 'தாபாங் 2'ஆம் பாகத்தை அர்பாஸ் கான் இயக்கினார்.
இப்படத்தின் 3ஆம் பாகமான 'தாபாங் 3' படத்தை நடிகர் சல்மான்கானை வைத்து பிரபுதேவா இயக்கிவருகிறார். இப்படத்தில் சோனாக்ஷி சின்ஹா, சயீ மஞ்ச்ரேக்கர் (அறிமுகம்) ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
'தபாங் 3' திரைப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளதாக, படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடும் உரிமையை கே.ஜே.ஆர் பட நிறுவனம் கைப்பற்றியுள்ளது.