கரோனா தொற்று காரணமாக இந்தியாவில் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் பாலிவுட் நடிகர் சல்மான் கான் மும்பையை அடுத்துள்ள தனது பான்வெல் பண்ணை வீட்டில் இருக்கிறார்.
இங்கிருந்துகொண்டே அவர் தேசிய ஊரடங்கால் வறுமையில் தவித்துவரும் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிவருகிறார்.
தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு தனது சொந்த பிராண்ட் சானிடைசரை அவர் அறிமுகம் செய்துள்ளார்.
அதில், "நான் எனது பிராண்ட் FRSH ஐ அறிமுகப்படுத்தியுள்ளேன். இது கைகளை சுத்தம் செய்ய மிகவும் உதவியாக இருக்கும். முதலில் டியோடரண்டுகளைத் தொடங்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் சானிடைசர்களே தற்போதைய தேவை என்பதால், அதனை அறிமுகம் செய்துள்ளேன். பாதுகாப்பாக வீட்டிலேயே இருங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள 'ராதே: யுவர் மோஸ்ட் வாண்டட் பாய்' ஈத் பெருநாளில் வெளியாக இருந்தது. ஆனால் கரோனா நெருக்கடி காரணமாக இதன் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் இப்படத்தில் இருந்து ஏதேனும் பாடலை வெளியிடுவாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: நீண்ட இடைவெளிக்கு பின் பெற்றோரை சந்தித்த சல்மான் கான்