நடிகர் சல்மான் கான் மஹாராஷ்டிராவில் உள்ள பான்வேல் பண்ணை வீட்டில் தனது குடும்பத்துடன் தங்கியுள்ளார். இதற்கிடையில் அவர், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் இணைந்து, ‘TERE BINA' என்ற மியூசிக் வீடியோவிற்கான ஷுட்டிங்கை சத்தமே இல்லாமல் நடத்தி முடித்துள்ளார். இப்பாடலை அவரே பாடியுள்ளார் என்பது சிறப்பு.
இதுகுறித்து நடிகையும், தொகுப்பாளினியுமான வாலுஷா, சல்மான் கான், ஜாக்குலின் ஆகியோரிடம் பேட்டியெடுத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அப்போது பேசிய சல்மான் கான் ”பண்ணை வீட்டில் இதுபோன்று பாடல் எடுப்பது, இதுவே முதல் முறை. இந்த பாடல் எந்த படத்திற்காகவும் எழுதவில்லை. அதனால் தான் மியூசிக் வீடியோவாக எடுக்க முடிவு செய்தோம். இது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது” என்றார்.
தொடர்ந்து பேசிய ஜாக்குலின் பெர்னாண்டஸ், ”இத்தனை நாள்களாக, நாங்கள் மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனங்களின், பாடல்களின் ஷுட்டிங்கை நடித்து வந்தோம். ஆனால் இதில் மேக்-ஆப், ஆடைகளுக்கு முக்கியதுவம் என்று எதுவும் வழங்கப்படவில்லை. இது ஒரு நல்ல வித்தியாசமான அனுபவமாக இருந்தது” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க:அப்போ ஆல்கஹால்... இப்போ ஆந்திர உணவு... ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் காஜல்