தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பாதுகாப்பாக இருக்கக்கூறிய சல்மான் கான், கொந்தளிக்கும் நெட்டிசன்கள்! - பாலிவுட் செய்திகள்

நடிகர் சல்மான் கான், தான் முகக்கவசம் அணிந்து சைக்கிள் ஓட்டுவது போன்ற புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு மக்களைப் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொண்ட நிலையில், அவரை சாடியும் கேலி செய்தும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

முகக்கவசம் அணிந்து சைக்கிள் ஓட்டும் சல்மான் கான்
முகக்கவசம் அணிந்து சைக்கிள் ஓட்டும் சல்மான் கான்

By

Published : Sep 10, 2020, 11:45 PM IST

கரோனா பரவலுக்கு மத்தியில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு, மக்கள் இயல்பு வாழ்க்கையை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் நடிகர் சல்மான் கான், தான் முகக்கவசம் அணிந்து சைக்கிளில் பயணிப்பது போன்ற புகைப்படம் ஒன்றை #StaySafe என்ற ஹேஷ்டேக் உடன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், #StaySafe என்ற சல்மான் கானின் இந்த ஹேஷ்டேக் இணையத்தில் கடும் கேலிக்குள்ளாகியுள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டு சல்மான் கானின் கார் மோதியதில் சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் கொல்லப்பட்டு, நான்கு பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தின்போது சல்மான் குடிபோதையில் இருந்ததாகவும், சல்மான்தான் காரை ஓட்டி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி நீதிமன்றம் அவரை வழக்கிலிருந்து விடுவித்தது.

இந்நிலையில் சல்மான், #StaySafe என்ற ஹேஷ்டேக் உடன் தான் பயணிக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருப்பது கண்டு இணையவாசிகள் அவரை கேலிக்குள்ளாக்கி வருகின்றனர்.

”அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், உங்கள் மீது தனது வாகனத்தை ஏற்ற சல்மான் வருகிறார்” என்றும், ”நீங்கள் வாகனம் ஓட்டுவது குறித்து யாரும் பாதுகாப்பாக உணரவில்லை” என்றும் அவரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து கேலிக்குள்ளாக்கி வருகின்றனர்.

மேலும், கங்கனா ரனாவத்தின் அலுவலகக் கட்டடம் இடிக்கப்பட்டு பாலிவுட்டில் பெரும் சலசலப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், சல்மான் இது குறித்து கருத்து தெரிவிக்காமல் அமைதியாக இருந்து வருவது குறித்தும் சாடி,நெட்டிசன்கள் அவரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிங்க :இந்தி பிக் பாஸ் சீசன்- 14 ப்ரோமோ வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details