'தபாங் 3' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சல்மான் கான்-பிரபு தேவா இணைந்துள்ள படம் 'ராதே: யுவர் மோஸ்ட் வான்டட் பாய்'. திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தை சல்மான் கான் தயாரிக்கிறார். மேலும் ஜாக்கி ஷெராஃப், ரந்தீப் ஹூடா, சோஹேல் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சல்மான்கானின் 'ராதே: யுவர் மோஸ்ட் வாண்டட் பாய்' ட்ரெய்லர் நாளை வெளியீடு - சல்மான்கானின் புதியப்படம்
மும்பை: சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள 'ராதே: யுவர் மோஸ்ட் வாண்டட் பாய்' திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை (ஏப்ரல் 22) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு வெளியான 'வாண்டட்' திரைப்படத்தின் அடுத்த பாகமாக எடுக்கப்பட்டு வரும் இந்தப் படம், 'வெடரன்' என்கிற தென் கொரிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இந்தபடம் ரம்ஜான் வெளியீடாக மே 13ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் நாளை (ஏப்ரல் 22) வெளியாகிறது.
இந்த படம் திரையரங்கில் வெளியாகும் அதேநாளில் டிஜிட்டல் தளமான ஜீ ஸ்டுடியோஸின் ஜீ5 விலும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். கரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்கிற்கு வர முடியாத மக்கள் வீட்டிலிருந்து ஓடிடி தளத்தில் இப்படத்தை கண்டுகளிக்கவே ராதே படக்குழுவினர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிய வருகிறது.