கரோனா வைரஸ் காரணமாக மே 17 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு துறைகளும் நஷ்டமடைந்துள்ளன. கோவிட்-19 காரணமாக பலரும் வேலைக்குச் செல்லாமல், தங்களது வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். அவ்வாறு தவிக்கும் மக்களுக்குப் பலரும் தங்களால், முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
உணவின்றி தவித்த மக்களுக்கு உதவிய சல்மான் கான் - சினிமா நியூஸ்
மும்பை: ஊரடங்கு காரணமாக உணவின்றி தவித்த மக்களுக்கு நடிகர் சல்மான் கான் உணவு பொருள்கள் கொடுத்து உதவி செய்துள்ளார்.
சல்மான் கான்
அந்த வகையில் நடிகர் சல்மான் கான் மும்பையில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு பொருள்கள் வழங்கி உதவி செய்து வருகிறார். இதற்காக ‘Being Haangryy’ என்ற உணவு டிரக் ஒன்றை உருவாக்கி, உணவு பொருள்கள் வழங்கி வருகிறார். அப்புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:'மன்னன் முட்டாளாக இருந்தால் நாடு உருப்படாது'- இயக்குநர் அமீர்