தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் சல்மான் கானின் 'பாய் பாய்' பாடல்! - பாய் பாய் பாடல்

சகோதரத்துவம், ஒற்றுமையின் உணர்வைக் குறிக்கும் சல்மான் கானின் 'பாய் பாய்' பாடல் சமூகவலைதளத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Salman
Salman

By

Published : May 26, 2020, 11:34 PM IST

ஊரடங்கு உத்தரவால் பாலிவுட் நடிகர் சல்மான் கான் மும்பையை அடுத்துள்ள பன்வெலில் உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கியுள்ளார். இந்த ஊரடங்கால் பிரபல நடிகர், நடிகைகள் தாங்கள் ஈடுபடும் பொழுதுபோக்கு அம்சங்களை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதில் ஃபிட்னஸ், அழகு குறிப்புகள், போட்டோஷூட், விழிப்புணர்வு வீடியோ, சமையல் என தங்களுக்குப் பிடித்த விஷயங்களை பதிவேற்றிவருகின்றனர்.

இந்நிலையில், சல்மான் கான் இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். தனது பெயரிலேயே ஏப்ரல் 18ஆம் தேதி தொடங்கிய இந்த யூடியூப் சேனலில் நடிகர் சல்மான் கான் பாடி ஆடுவது போன்ற வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இந்த யூடியூப் சேனல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதை அடுத்து சேனல் தொடங்கிய சில நாட்களிலேயே 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சப்ஸ்க்ரைபர்கள் பெற்றது.

சமீபத்தில் சல்மான் கான் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் இணைந்து, தேரே பீனா' என்ற மியூசிக் வீடியோவை வெளியிட்டார். பாடல் முழுவதும் சல்மான் கான், ஜாக்குலின் ஆகியோர் இணைந்து ரொமான்ஸ் செய்த காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. சல்மான் கான் பாடியுள்ள இப்பாடலை ஷபீர் அகமது எழுதியிருந்தார்.

ஈகைத் திருநாளை முன்னிட்டு சல்மான் கான் புதிய பாடலான 'பாய் பாய்' என்னும் பாடலை வெளியிட்டுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "ஈகைத் திருநாளான இந்த புனித நேரத்தில் உங்கள் அனைவருக்கும் ஒரு சிறப்பு பரிசு. பாய் பாய் பாட்டை கேட்டு சகோதரத்துவத்தை பரப்புங்கள். அனைவருக்கும் ஈகைப்பெருநாள் வாழ்த்துகள்!"

மூன்று நிமிடம் ஐம்பத்து நான்கு வினாடி கொண்ட இப்பாடல் சகோதரத்துவம், ஒற்றுமையின் உணர்வைக் குறிக்கிறது. இந்த பாடல் பன்வெலில் உள்ள சல்மானின் பண்ணை இல்லத்தில் உருவாக்கப்பட்டது.

சல்மான் கானால் உருவாக்கப்பட்டுள்ள இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதையும் படிங்க: சொந்த பிராண்ட் சானிடைசரை அறிமுகப்படுத்திய சல்மான்

ABOUT THE AUTHOR

...view details