ஊரடங்கு தொடங்கியதிலிருந்து, பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது பண்ணை வீட்டில் செட்டிலாகி உள்ளார். அங்கு சைக்கிள் ஓட்டுவது, குதிரை சவாரி செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு தனது நேரத்தைச் செலவு செய்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது நடிகர் சல்மான் கான் விவசாயியாகக் களமிறங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் ஒரு டிராக்டகர் கொண்டு உழவு வேலை செய்ய, அவருக்குத் துணையாக ஒருவர் டிராக்டரில் பயணிக்கிறார்.