பிரபு தேவா இயக்கத்தில் சல்மான் கான், சோனாக்ஷி சின்ஹா, சயீ மஞ்ச்ரேக்கர் (அறிமுகம்) ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் ‘தபாங் 3’ (Dabangg 3). இதில் சுதீப், அர்பாஸ் கான், சந்தோஷ் சுக்லா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். சல்மான் கான், நிக்கி திவேதி, அர்பாஸ் கான் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படம் வரும் டிசம்பர் 30ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
#dabbang3 - புதிய கதாநாயகி புகைப்படத்தை பகிர்ந்த சல்மான்! - தபாங் 3
தபாங் 3 (Dabang 3) படப்பிடிப்பு தளத்தில் சயீ மஞ்ச்ரேக்கருடன் எடுத்த புகைப்படத்தை சல்மான் கான் பகிர்ந்துள்ளார்.

Saiee manjrekar and salman khan
இதன் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸை தனது சமூக வலைதள பக்கங்களில் சல்மான் கான் பகிர்வது வழக்கம். சில புகைப்படங்கள் அதில் வைரலாகியுள்ளது.
இந்நிலையில் சல்மான், ஹீரோயின் சயீ மஞ்ச்ரேக்கருடன் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.