தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'பாய் பாய் பாடலைத் திரும்பத் திரும்ப கேளுங்கள்' - சல்மான் கான் - சகோதரத்துவம்

சகோதரத்துவம் - நல்லிணக்கம் குறித்து வெளியான 'பாய் பாய்' பாடலை இளைய தலைமுறையினர் திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும் என சல்மான் கான் கேட்டுக்கொண்டுள்ளார்.

Salman
Salman

By

Published : May 28, 2020, 1:27 PM IST

ஊரடங்கு உத்தரவால் பாலிவுட் நடிகர் சல்மான் கான் மும்பையை அடுத்துள்ள பன்வெல்லில் உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கியுள்ளார். இந்தக் காலத்தில் சல்மான் கான் யூ-ட்யூபில் தனக்குக்கென்று தனியாகச் சேனல் ஒன்றை தொடங்கி அதில் புதிய காணொலி பாடல்களை வெளியிட்டுவருகிறார்.

அந்த வகையில் ஈத் திருநாள் விருந்தாக சல்மான் கானே, பாடிய 'பாய் பாய்' என்ற காணொலி பாடலை வெளியிட்டார். சகோதரத்துவம், ஒற்றுமையுணர்வு, மத நல்லிணக்கம் உள்ளிட்ட கருத்துகளை மையமாக வைத்து இந்தப் பாடல் உருவாக்கப்பட்டது. இந்தப் பாடலுக்கு சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது சல்மான் கான் தனது சமூக வலைதளத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அதில், "'பாய் பாய்' பாடலை ரசித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி.

தயவு செய்து இந்தப் பாடலை அனைத்து இளைய தலைமுறையினரும் திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும். கடவுள் ஆசீர்வதிப்பார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பாடல் பன்வெல்லில் உள்ள சல்மானின் பண்ணை இல்லத்தில் உருவாக்கப்பட்டது. பியார் கரோனா, தேரே பினா ஆகிய பாடலுக்குப் பின் 'பாய் பாய்' பாடல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: சகோதரத்துவத்தை வலியுறுத்தும் சல்மான் கானின் 'பாய் பாய்' பாடல்!

ABOUT THE AUTHOR

...view details