தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'நீங்கள் எதை நோக்கி ஓடுகிறீர்கள்? வாழ்வையா சாவையா'? - சல்மான் கான் சரமாறி கேள்வி - சல்மான் கான் ஊரடங்கு செய்தி

கரோனா தொற்றின் காரணமாக தொடர்ந்து பணியாற்றிவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் ஆகியோரை தாக்குவதை மக்கள் நிறுத்தவேண்டும் என நடிகர் சல்மான் கான் வீடியோ வெளியிட்டு கேட்டுக்கொண்டார்.

salman khan lockdown video on instagram
salman khan lockdown video on instagram

By

Published : Apr 16, 2020, 3:48 PM IST

இந்தியாவில் கரோனா தொற்று அதிகரித்து பல உயிர்களை கொன்றுவரும் நிலையில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 10 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில் ஊரடங்கை மதிக்காமல் வெளியே சுற்றி அலட்சியமாக இருப்பதை சாடினார். மேலும் வெளியே செல்வதையும் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதையும் தவிர்த்து விடும்படி கேட்டார்.

கரோனா தொற்று இருப்பவரின் வலியை புரிந்துகொள்ளாத ஒருவர் மனிதர் கிடையாது என்று அந்த வீடியோ பதிவில் தெரிவித்தார். இதுபோன்ற அசாதாரண சூழலில் பல மணி நேரமாக பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் ஆகியோரை மதித்து மக்கள் அனைவரும் வீட்டில் இருக்கும்படி சல்மான் கான் எச்சரித்தார். மேலும், அவர்களை எக்காரணம் கொண்டும் தாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து உயிரை காக்க போராடி கொண்டிருக்கும் மருத்துவர்கள் மீதும், செவிலியர்கள் மீதும் கல் எறிபவர்களையும் வீடியோவில் சாடினார். கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவமனையை விட்டு தப்பித்து ஓடுகின்றனர். நீங்கள் எதை நோக்கி ஓடுகிறீர்கள்? வாழ்வை நோக்கியா அல்லது சாவை நோக்கியா என்று கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க...வீட்டிற்குள் இருக்கும் மக்களுக்கு நன்றி - சல்மான் கான் ட்வீட்

ABOUT THE AUTHOR

...view details