தேசிய ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டிருக்கும் 25 ஆயிரம் தினக்கூலி தொழிலாளர்களுக்கு நடிகர் சல்மான் கான் உதவ இருக்கிறார்.
கரோனா தொற்று காரணமாக இந்தியாவில் தேசிய ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அமல்படுத்தியுள்ளார். இதனால் அனைத்து வித படப்பிடிப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா தொழிலை நம்பியிருக்கும் கூலித்தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து Federation of Western India Cine Employees (FWICE) அமைப்பில் உள்ள 25 ஆயிரம் தொழிலாளர்களுக்கு சல்மான் கான் உதவ இருப்பதாக அந்த அமைப்பின் தலைவர் பி.என் திவாரி கூறியுள்ளார்.
இது குறித்து திவாரி, இந்த அமைப்பில் உள்ள தொழிலாளர்களின் வங்கிக் கணக்குகள் கூடிய முழு பட்டியலை சல்மான் கான் கேட்டுள்ளார். காரணம் அவர்களுக்கு சல்மான் கானே நேரடியாக நிதியுதவி செய்யவுள்ளார். முதலில் நாங்கள் சல்மான் கானை அனுகிய போது எங்களிடம் இந்த அமைப்பில் எத்தனை தொழிலாளர்கள் உள்ளனர் என்று கேட்டார். அதற்கு நாங்கள் கிட்டதட்ட 25 ஆயிரம் பேர் இருப்பதாக கூறினோம். உடனே அவர்களுடைய பட்டியலை தயார் செய்யும்படி கூறினார்.
மக்கள் அனைவரும் தற்போது இந்த 21 நாட்கள் ஊரடங்குக்கு மட்டுமே தயாராகியுள்ளனர். இது நீடித்தால் நிலமை மிகவும் மோசமாகிவிடும். ஆனால் எங்கள் அமைப்பில் உள்ள தொழிலாளர்களுக்கு இரண்டு நாட்களுக்கு மேல் இந்த ஊரடங்கு நீடித்தால் அவர்களுக்கு மற்றவர்களின் உதவி தேவைப்படுகிறது.
பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு பெரிய பிரபலங்கள் நன்கொடை வழங்கி மோடியின் முன் நற்பெயரை பெற்று வருகின்றனர். ஆனால் Federation தொழிலாளர்களுக்கு நன்கொடை வழங்க யாரும் இதுவரை ஒரு போன் கால் கூட செய்யவில்லை. இது ரொம்ப வருத்தமாக இருக்கிறது என்றார்.