தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தமிழில் ரிலீஸாகும் சல்மான்கானின் சூப்பர் ஹிட் படம் - பிரபு தேவா

பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிப்பில் ஹிந்தியில் உருவாகி வரும் 'தபாங் 3' திரைப்படம், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ரிஸீஸ் செய்யப்படவுள்ளது.

salman khan and Prabhu deva in Dabangg 3 sets

By

Published : Aug 22, 2019, 5:07 AM IST

ஆக்‌ஷன் கலந்த காமெடி படமாக உருவாகி வரும் 'தபாங் 3' டிசம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

2010ஆம் ஆண்டு சல்மான்கான் - சோனாக்‌ஷி சின்ஹா நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் 'தபாங்'. இதன் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து 'தபாங் 2' தயாராகி 2012இல் வெளியானது. இரண்டாம் பாகமும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வசூல் வேட்டை நடத்தியது.

இதைத்தொடர்ந்து தபாங் சீரிஸ் படங்களில் மூன்றாவது பாகமாக 'தபாங் 3' ஆறு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தற்போது உருவாகி வருகிறது. முந்தைய பாகங்களில் நடித்த முக்கிய நடிகர்கள் இதிலும் இடம்பெற்றுள்ள நிலையில், புதிதாக கன்னட நடிகர் கிச்சா சுதீப் தோன்றவுள்ளார்.

படத்தை பிரபு தேவா இயக்குகிறார். ஷஜித் - வாஜித் பாடல்களுக்கு இசையமைக்க, சந்தீப் ஷிரோத்கர் பின்னணி இசையை மேற்கொள்கிறார். 'தபாங் 3' படம் தபாங் சீரிஸ் கதைகளின் முன்கதையை விவரிப்பதாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், தபாங் சீரிஸ் படங்களில் 'தபாங் 3' முதல் முறையாக தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடா ஆகிய மொழிகளிலும் வெளியிடப்படவுள்ளது. இதனை நடிகர் சல்மான்கான் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details