நாடெங்கும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் நடிகர், நடிகைகள் விழிப்புணர்வு வீடியோக்களையும் தாங்கள் வீட்டில் செய்யும் வேலைகள் குறித்தும் காணொலிகளை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து மகிழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் தனது இருப்பிடத்தில் இருந்துகொண்டு அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
ஆனால், சமீபத்தில் ஒரு நடிகையின் லைவ் சாட்டில், திடீரென சல்மான் கான் தலை காட்டியது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நடிகை யூலியா இன்ஸ்டாகிராமில் லைவ் வீடியோ ஒன்றில் பேசிக்கொண்டிருக்க, அங்கு எதிர்பாராதவிதமாக சல்மான் கான் தலை காட்டியுள்ளார்.