தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மீண்டும் 'Me too' புகாரில் சிக்கியுள்ள பாலிவுட் பிரபலம்! - பாலிவுட் நடிகரும் திரைப்பட இயக்குநருமான சஜித் கான்

பாலிவுட் நடிகரும் திரைப்பட இயக்குநருமான சஜித் கான் மீது, தன் இன்ஸ்டாகிராம் கணக்கின் வாயிலாக பெண் ஒருவர் அடுக்கடுக்கான பாலியல் புகார்களை முன்வைத்துள்ளார்.

சஜித் கான்
சஜித் கான்

By

Published : Sep 11, 2020, 9:19 PM IST

Updated : Sep 11, 2020, 10:28 PM IST

ஹவுஸ் ஃபுல் திரைப்பட சீரிஸை இயக்கியவரும், பிரபல பாலிவுட் நடன இயக்குநர் ஃபரா கானின் சகோதரருமான சஜித் கான் மீது கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கி 'Me too' இயக்கத்தின்கீழ், பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தற்போது பெண் மாடல் ஒருவர் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். டிம்பிள் பால் எனும் பெண்ணின் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதில், சஜித் கான் தனது 17 வயதில் இருந்தே தன்னிடம் அத்துமீறி வருவதாகவும், தான் பாலிவுட்டை சாராத குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்பதாலும், தனக்காக தானே பாலிவுட்டில் உழைத்து சம்பாதிக்க வேண்டிய தேவை இருந்ததாலும் இத்தனை நாள் தான் அமைதி காத்து வந்ததாகவும் டிம்பிள் பால் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் கணக்கில் சஜித் கான் மீது வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு

தொடர்ந்து சஜித் கான் தன்னிடம் அத்துமீறிய சம்பவம் குறித்து தெரிவித்த அப்பெண், சஜித் கான் தன்னை ஆபாசமாகத் தொட முயன்றதாகவும், அவர் முன்னிலையில் தன்னை நிர்வாணமாகத் தோன்றும்படி வற்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் கணக்கில் சஜித் கான் மீது வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு

மேலும், ஜனநாயகம் இறக்கும் முன், பேச்சுரிமை மறுக்கப்படும் முன், தான் இதைக் கூறிவிட நினைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே 'Me Too'வின் கீழ், சஜித் கான் மீது அடுக்கடுக்கான புகார்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தப் பதிவுகளைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் அவரைக் கடுமையாகச் சாடி வருகின்றனர்.

முன்னதாக, Me Too புகார்களைத் தொடர்ந்து சென்ற ஆண்டு வெளியான 'ஹவுஸ் ஃபுல்’ படத்தின் நான்காம் பாகத்திலிருந்து சஜித் கான் விலகியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :'உன்னுடன் வாழும் வாழ்க்கையை எதிர்நோக்கி உள்ளேன்' - காதலனை கரம் பிடித்த பூனம் பாண்டே

Last Updated : Sep 11, 2020, 10:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details