தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

12ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்த பிரபல நடிகை! - Rinku scores 82%

'சாய்ரத்' படத்தின் மூலம் சினிமா ரசிகர்களை கவர்ந்த நடிகை ரிங்கு ராஜ்குரு 12ஆம் வகுப்பில் 533 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார்.

ரிங்கு ராஜ்குரு

By

Published : May 29, 2019, 10:12 AM IST

Updated : May 29, 2019, 10:20 AM IST

இயக்குநர் நாகராஜ் மஞ்சுலே இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'சாய்ரத்'. ஆணவக்கொலையை மையப்படுத்தி உருவான இப்படத்தில் ஆகாஷ் தொஷார், ரிங்கு ராஜ்குரு ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மொழியை தாண்டி தென்னிந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இப்படத்தில் வரும் நடிகை ரிங்கு ராஜ்குரு நடிப்பை பார்த்து தமிழ் ரசிகர்கள் மெய்சிலிர்த்துப் போனார்கள். இப்படத்தில் ரிங்கு ராஜ்குரு எதற்கு அஞ்சாத பெண்ணாக நடித்திருந்தார். மேலும், காதலனை காப்பாற்ற தனது குடும்பத்தையே எதிர்த்து துப்பாக்கி ஏந்தி போராடும் காட்சிகளில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார்.

சாய்ரத் படத்தில் தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திழுத்தார். திரையில் அவர் செய்யும் குறும்புகளை பார்த்து நிஜ வாழ்வில் நமக்கு ஒரு காதலி கிடைத்தால் இப்படித்தான் இருக்க வேண்டும் என ஏங்கியவர்களும் உண்டு. இதுவரை பாலிவுட், கோலிவுட் கண்டிராத புது அவதாரம்தான் ரிங்கு ராஜ்குரு என்று பலரும் வியந்து பாராட்டினர். இப்படம் மராத்தியில் 100 கோடி வசூல் சாதனை புரிந்து சாதனைப் படைத்தது.

இந்நிலையில், சாய்ரத் படத்தில் பார்க்கும்போது பெரிய பொண்ணுபோல் தெரிந்த ரிங்கு ராஜ்குரு இந்த வருடம்தான் 12ஆம் வகுப்பே முடித்துள்ளார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்.

நேற்றுதான் அவருக்கு 12ஆம் வகுப்பு தேர்வு முடிவகள் வெளிவந்தது. அவர் 650 மதிப்பெண் தேர்வெழுதி தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், 533 மதிப்பெண்கள் பெற்று கல்லூரிக்கு செல்ல இருக்கிறார் என்றால் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.

சாய்ரத் பட போஸ்டர்

இவர் 12ஆம் வகுப்பில் 82 விழுக்காடு மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். ரிங்கு ராஜ்குரு சாய்ரத் படத்தில் நடிக்கும்பொழுது அவருடைய வயது 14 தானாம். தற்போது அவர் நாகராஜ் மஞ்சுலே இயக்கும் புதிய படத்தில் அமிதாப் பச்சனுடன் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Last Updated : May 29, 2019, 10:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details