தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

முழு சுதந்திரம் கொடுத்த சாய்னா - பரினீதி புகழாரம் - நடிகை பரினீதி சோப்ரா

சாய்னா படத்தை சரியான முறையில் கையாள வேண்டும் என்ற அழுத்தம் இருந்தது. ஆனால் அதை போக்கும் விதமாக ஆதரவு கொடுத்ததுடன், தனது வாழ்க்கை குறித்து அறிந்து கொள்ள முழு சுதந்திரமும் சாய்னா தந்ததால் படம் சிறப்பாக வந்துள்ளதாக நடிகை பரினீதி சோப்ரா தெரிவித்துள்ளார்.

Parineeti Chopra in saina movie
சாய்னா படத்தில் நடிகை பரினீதி சோப்ரா

By

Published : Mar 9, 2021, 6:44 PM IST

மும்பை:தனது வாழ்கை குறித்து அறிந்து கொள்ள பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் முழு சுதந்திரமும் கொடுத்தார் என்று பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா புகழ்ந்துள்ளார். சாய்னா என்ற பெயரில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சாய்னா நேவலாக பரினீதி சோப்ரா நடித்துள்ளார்.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில், பங்கேற்று பேசிய பரினீதி சோப்ரா, "ஒவ்வொரு படத்துக்கும் தனித்தவமான பயணம் இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் படத்தின் முழுக் கதையையும் படித்தேன். அப்போதிருந்தே படத்துக்காக ஏதாவது வித்தியாசமாக செய்யவேண்டும் என நினைத்து, அதற்காக என்னை தயார்படுத்திக்கொண்டேன். படத்தின் இயக்குநர் அமோல் என்னிடம் திரைக்கதையை விவரித்தார்.

இந்தப் படத்தை சரியாக எடுக்க வேண்டும் என்ற அழுத்தம் நடிகர், படக்குழுவினர்கள் என அனைவருக்கும் இருந்தது. ஆனால், சாய்னா எங்களுக்கு ஆதரவாக இருந்தார். தனது வாழ்க்கை குறித்து தெரிந்து கொள்வதற்கு முழு சுதந்திரமும் தந்தார். இதனால் படமும் சிறப்பாக வந்துள்ளது. படத்துக்காக பேட்மிண்டன் விளையாட கற்றுக்கொள்வதில் மிகுந்த சிரமம் அடைந்தேன்" என்றார்.

பாலிவுட் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சாய்னா திரைப்படம் வரும் 26ஆம் தேதி திரைக்கும் வருகிறது. தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

இதையும் படிங்க:ஹலிதா சிரித்துக்கொண்டே சாமியாடுபவர் - 'ஏலே' சமுத்திரக்கனி

ABOUT THE AUTHOR

...view details