பாலிவுட் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்களில் பரினீதி சோப்ராவும் ஒருவர். இவர் பாலிவுட்டில் டாப் ஸ்டார்களுடன் நடித்து வருகிறார். அதே போல் சமூக வலைதளங்களிலும் பயங்கர ஆக்டிவாக செயல்படுகிறார்.
பரினீதி சோப்ரா நடிப்பில் வெளி வந்த 'கோல்மான் எகெய்ன்', 'மேரே பியாரி பிந்து', 'கேசரி' ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இவர் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை அமோல் குப்தே இயக்குகிறார்.
சமீபத்தில் பரினீதி சோப்ரா தனது சமூகவலைதள பக்கத்தில், அடுத்த 30 நாட்கள் சாய்னாவாக வாழப்போகிறேன் என தெரிவித்திருந்தார். ஆனால் திடீர் என்று கழுத்தில் அடிப்பட்டுள்ளதாக ஒரு பதிவிட்டிருந்தார். அதில் தனக்கு காயம் ஏற்படக்கூடாது என்று சாய்னாவின் படக்குழு என் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தது என்றும், எதிர்பாரதவிதமாக கழுத்தில் காயம் ஏற்பட்டுவிட்டுவிட்டதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது அனைத்து உடல் உபாதைகளில் இருந்தும் மீண்டு வரும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். உடல் முழுவதும் இறுக்கமாகவும் கடினமாகவும் இருப்பதாகவும் இதில் இருந்து வெளிக்கொண்டு வரும் எனது பிசியோதெரபிஸ்ட்க்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.