பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான், தபு, அலய்யா ஃபர்னிதுரேவாலா, குப்ரா சேட் உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம் 'ஜவானி ஜானிமன்'.
இந்தப்படத்தை மித்ரான், நோட்புக் உள்ளிட்ட படங்களை இயக்கிய நிதின் கக்கர் இயக்குகிறார். பூஜா என்டர்டெய்ன்மென்ட், பிளாக் நைட் பிலிம்ஸ், நார்தர்ன் லைட்ஸ் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
இந்தப்படம் ஜனவரி 31ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இரண்டு போஸ்டர்களை சமீபத்தில் படக்குழு வெளியிட்டிருந்தது.
அதில், மது பாட்டில்கள், கவர்ச்சிக் கன்னிகளுடன் படுக்கையில் கிடக்கும் சைஃப் அலி கான் மதுவை தரையில் ஊற்றுவது போன்று போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது. பிளே பாயாக வலம்வரும் சைஃபின் இந்த புதிய லுக் படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியது.
இதனிடையே 'ஜவானி ஜானிமன்' படக்குழு அடுத்த அப்டேட் கொடுக்கும் வகையில் படத்தின் 50 நொடி கொண்ட டீஸரை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், காக்டெய்ல் அருந்திக் கொண்டு பப்பில் குதூகலத்துடன் கவர்ச்சிக் கன்னியருடன் உலாவரும் சைஃபின் பிளே பாய் தோற்றம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க...
'குற்றப் பரம்பரை'க்காக இணையும் பாரதிராஜா-சுரேஷ் காமாட்சி கூட்டணி