பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான், தபு, அலய்யா ஃபர்னிதுரேவாலா, குப்ரா சேட் உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம் 'ஜவானி ஜானிமன்'.
இந்தப்படத்தை மித்ரான், நோட்புக் உள்ளிட்ட படங்களை இயக்கிய நிதின் கக்கர் இயக்குகிறார். பூஜா என்டர்டெய்ன்மென்ட், பிளாக் நைட் பிலிம்ஸ், நார்தர்ன் லைட்ஸ் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
இந்தப்படம் முன்பு 2020 பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது, ஜனவரி 31ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.