தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'கபீர் சிங்' படத்தால் ஜோக்கரான ஷாகித் கபூர் - பாலிவுட் வட்டாரம்

ஷாகித் கபூர் நடித்துள்ள 'கபீர் சிங்' திரைப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருவதால், பாலிவுட் வட்டாரத்தை கலக்கமடைய வைத்துள்ளது.

ஷாகித் கபூர்

By

Published : Jun 29, 2019, 12:46 PM IST

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ’அர்ஜுன் ரெட்டி’. காதலியை பிரிந்து தேவதாஸ் வாழ்க்கை வாழும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் மிரட்டியிருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற காதல் காட்சிகளும், முத்தக் காட்சிகளும் சர்ச்சைகளை கிளப்பின. ஆனாலும் இப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

கபீர் சிங்

இந்நிலையில், ’அர்ஜுன் ரெட்டி’ ஹிந்தி ரீமேக்கான ‘கபீர் சிங்’ படத்தில் ஷாகித் கபூர் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் ஜூன் 21ஆம் தேதி வெளியாகி, ஆறு நாட்களில் 140 கோடி வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட்டடித்துள்ளது. ஷாகித் கபூர் நடித்த படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் இதுதான் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கு ’அர்ஜுன் ரெட்டி’-ஐ இயக்கிய சந்தீப் வங்காதான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். இப்படத்தில், ஷாகித் கபூருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார்.

கியாரா அத்வானி, ஷாகித் கபூர்

ரசிகர்களின் அமோகமான ஆதரவை பெற்று இப்படம் ஓடிக்கொண்டிருந்தாலும், இதில் காதல் தழும்ப இடம்பெற்ற முத்தக் காட்சிகளும் வசனங்களும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளன. பொதுமேடைகளில், ஊடகங்களில் இப்படத்தை பற்றி பேசக்கூடிய விவாதமாக மாறியுள்ளது. சினிமாவில் பெண்களை மேலும், மேலும், கவர்ச்சி பொருளாக காட்டியிருப்பது பெண்களை கொச்சைப்படுத்துவது போன்று உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர். ஷாகித் கபூரை நடிகர் என்று சொல்ல அருவருப்பாக உள்ளது, இப்படியா நடிப்பது. படம் எடுப்பதாகக் கூறி கேவலமாக எடுப்பதா என்று எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.

கபீர் சிங் சர்ச்சை

’கபீர் சிங்’ படம் வெளியான முதல்நாளில் இருந்து வெடித்த இந்த சர்ச்சை இன்றளவும் ஓய்ந்த பாடில்லை. ஷாகித் கபூர் நடிப்பில் மிரட்டியிருந்தாலும், அவரை ஹாலிவுட் ஜோக்கர் நடிகர் ஹீத் லெட்ஜருடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். கபீர் சிங் எதிர்பாராத விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்து வருவதால் ஷாகித் கபூர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் படத்தின் வெற்றியை கூட கொண்டாட முடியாத சூழலில் ஷாகித் கபூர் இருக்கிறாராம்.

ABOUT THE AUTHOR

...view details