தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பாதுகாப்பு முக்கியம் பாஸ்! கத்ரீனாவின் போஸ்டுக்கு கிளிக்கிய 10 லட்சம் லைக்குகள் - கற்றின கைப் இன்ஸ்டாகிராம்

நீங்கள் அணிந்திருக்கும் ஆடை மோசமாக இருந்தாலும் பாதுகாப்பாக இருப்பதை பிரதானமாக வைத்துக்கொள்ளுங்கள் என்று கத்ரீனா கைஃப் ரசிகர்களுக்கு அலர்ட் கொடுத்துள்ளார்.

kaitrina kaif with ppe kit
katrina kaif news

By

Published : Nov 2, 2020, 11:15 AM IST

மும்பை: கரோனா வைரஸ் பரவல் இன்னும் இருப்பதால் ரசிகர்கள் பாதுகாப்பாக இருப்பது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்

இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராமில் முகக்கவசம், முகமூடி, தனது ஆடைக்கு மேல் மெல்லிசான அங்கி அணிந்து தொற்று பாதிப்பு ஏற்படாதவாறு கூடுதல் பாதுகாப்புடன் உடை அணிந்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள அவர், "கரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து பரவி வரும் இந்தச் சூழலில் பாதுகாப்பாக இருப்பதே பிரதானம். நீங்கள் அணிந்திருக்கும் ஆடை மோசமாக இருந்தாலும் பரவாயில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

இவரது இந்தப் பதிவை பாலிவுட் பிரபலங்கள் உள்ளிட்ட 10 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர், தொடர்ந்து தனது செயல்பாடுகள் குறித்த அப்டேட்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளிப்படுத்தி வரும் கத்ரீனா, கரோனா ஊரடங்கு காலங்களில் நோய் தற்காப்பு பாதுகாப்பு வழிமுறைகளை கையாள்வது குறித்தும் தவறாமல் பதிவிட்டு வந்தார்.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கத்ரீனா கைஃப் நடித்துள்ள சூர்யவன்ஷி திரைப்படம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. இதையடுத்து தற்போது போன் பூட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details