பாலிவுட்டில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு மகேஷ் பட் இயக்கும் திரைப்படம் ’சடக் 2’. இத்திரைப்படம், கடந்த 1991ஆம் ஆண்டு வெளியான 'சடக்'படத்தின் இரண்டாவது பாகமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இதில், மகேஷ் பட்டின் மகள்கள் ஆலியா பட், பூஜா பட் இருவரும் நடித்துள்ளனர். மகேஷ் பட்டின் சகோதரர் முகேஷ் பட் தயாரித்துள்ள இப்படத்தில் ஆலியாவுக்கு ஜோடியாக ஆதித்யா ராய் கபூர் நடித்துள்ளார்.
ட்ரெய்லர் வெளியான சில மணி நேரத்திலேயே அதிக டிஸ்லைக் பெற்ற 'சடக் 2' - ஆலியா பட்டின் சடக் 2
மும்பை: ஆலியா பட் நடிப்பில் உருவாகியுள்ள 'சடக் 2' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அதிக டிஸ்லைக் பெற்ற பட ட்ரெய்லர் என்னும் புதிய சாதனையை பெற்றுள்ளது.
இப்படம் நேரடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் இன்று(ஆக.12) வெளியானது. ட்ரெய்லர் வெளியான சில மணி நேரத்திலேயே யூ-டியூப்பில் அதிக டிஸ்லைக் பெற்ற பட ட்ரெய்லர் என்னும் புதிய சாதனையை 'சடக் 2' பெற்றுள்ளது. ட்ரெய்லர் வெளியான 12 மணி நேரத்திற்குள் 1.5 மில்லியன் டிஸ்லைக்குகளை இது பெற்றுள்ளது.
டிஸ்லைக்குகளால் படக்குழுவினர் அதிர்ச்சி கலந்த சோகத்தில் உள்ளனர். மன அழுத்தம் காரணமாக, நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் உள்ள தனது வீட்டில் ஜூன் 14ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இவரது மறைவு பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது மறைவிற்கு பாலிவுட்டில் நிலவிவரும் வாரிசு அரசியல் தான் காரணம் என ரசிகர்கள், நடிகர்களின் வாரிசுகளை குறிவைத்து சமூகவலைதளத்தில் திட்டித் தீர்த்து வந்தனர்.
இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹ்ரின் படங்களை புறக்கணிப்பதாகக் கூறி நெட்டிசன்கள் சமூகவலைதளத்தில் ஹேர் ஸ்டைல்களை உருவாக்கி ட்ரெண்டாக்கி வந்தனர். அந்த வகையில், மகேஷ் பட்டின் மகள் என ஆலியா பட்டின் இந்த படத்தை புறக்கணிக்க வேண்டுமென சமூகவலைதளத்தில் குரல் எழுந்துள்ளது. மேலும் படத்தை வெளியிடும் டிஸ்னி தளத்தை செல்போனிலிருந்து அன்இன்ஸ்டால் செய்யுமாறு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அந்தவரிசையில், #UninstallHotstar என்ற ஹேஷ்டேக் சமூகவலைதளத்தில் நேற்று (ஆகஸ்ட் 11) டிரெண்டிங் ஆனது குறிப்பிடத்தக்கது.