தெலுங்கு திரையுலகின் பிரபலம் பிரபாஸ், பாலிவுட் பிரபல நடிகை ஸ்ரதா கபூர் இணைந்து நடித்திருக்கும் 'சாஹோ' படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது.
'சாஹோ' படத்தின் வெளியீட்டு தேதி மாற்றம்! - பிரபாஸ்
'பாகுபலி' பிரபலம் பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு மாற்றி அறிவித்துள்ளது.
முன்னதாக ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பாக படக்குழு கூறியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகிறது.
தெலுங்கில் சர்வா ஆனந்த் நடிப்பில் 'ராணாரங்கம்', அதிவி சேஷூ 'இவரு' ஆகிய இரு படங்களும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகிறது. அது மட்டுமல்லாமல் பிரபல இந்தி நடிகர்கள் அக்சய் குமாரின் 'மிஷன் மங்கள்', ஜான் ஆபிரகாமின் 'பட்லா ஹவுஸ்' ஆகிய இரண்டும் அதே தேதிகளில் வெளியாவதால் 'சாஹோ' படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றியுள்ளதாக படக்குழு கூறியுள்ளது.