தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 23, 2019, 3:09 PM IST

ETV Bharat / sitara

இன்று சாஹோ படத்தின் இசை வெளியீடு!

இயக்குநர் சுஜித் இயக்கத்தில் பிரபாஸும் ஷ்ரத்தா கபூரும் நடித்துள்ள சாஹோ படத்தின் பாடல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

இன்று சாஹோ படத்தின் இசை வெளியீடு

திரைப்பட வெளியீட்டிற்கு இன்னும் ஏழே நாட்கள் இருக்கக்கூடிய நிலையில் ரசிகர்களுக்கு ஏராளமான சுவாரஸ்ய தகவல்களை பரிசளிக்கிறது சாஹோ திரைப்படம். இதனால் இப்படம் இன்னும் அதிகப்படியான வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ரசிகர் வட்டத்தில் விதைக்கிறது.

இயக்குநர் சுஜித் இயக்கத்தில் யுனி கிரியேஷன் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் இப்படத்தில் பிரபல நடிகர் பிரபாஸும் பாலிவுட் நாயகி ஷ்ரத்தா கபூரும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளிவந்த இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவியது.

அடுத்தடுத்து காதல் கிறுக்கன், பேட் பாய் பாடல்களை வெளியிட்ட படக்குழு இன்று எல்லா பாடல்களையும் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே வெளிவந்த பாடல்கள் வைரலாகிவரும் நிலையில் இன்று அனைத்து பாடல்களையும் வெளியிட்டுள்ளதால் அடுத்த ஒரு வாரத்திற்கு இப்பாடல்கள் ரசிகர்களால் வைரலாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 30ஆம் தேதி திரையிடப்படும் இப்படத்திற்கு உலக அளவிலான ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

ABOUT THE AUTHOR

...view details