பிரபல பாலிவுட் நடிகை இஷா குப்தா தனது தோழிகளுடன் டெல்லியில் உள்ள உணவகத்திற்கு சாப்பிட சென்றுள்ளார். அப்போது ஹோட்டலின் உரிமையாளர் ரோகித் விக் என்பவர் இஷா குப்தாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துள்ளார். இதனால், மிகவும் அசவுகரியமான நிலையை அடைந்த இஷா குப்தா தனது ட்விட்டர் பக்கத்தில் ஹோட்டலின் உரிமையாளர் குறித்து பதிவிட்டுள்ளார்.
அவர் என்னை கண்களாலேயே பாலியல் வன்கொடுமை செய்தார் - இஷா குப்தா புகார் - raping her with his eyes
பிரபல ஹோட்டல் உரிமையாளரான ரோகித் விக் என்பவர் என்னை 'கண்களாலேயே கற்பழித்தார்' என பாலிவுட் நடிகை இஷா குப்தா தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அதில், 'நான் ஹோட்டலில் சாப்பிடும்பொழுது 'ஒரு நபர் என்னை கண்களாலேயே பாலியல் வன்கொடுமை செய்தார்'. அந்த பார்வை என்னை மிகவும் தலைகுனிய வைத்தது. இதுகுறித்து இரண்டுமுறை அவரை கூப்பிட்டு கண்டித்தேன். ஆனால் அவர் அதனை கண்டுகொள்ளாமல் மீண்டும் என்னை வெறிக்க வெறிக்க பார்த்தார். இதனையடுத்து நான் எனது இரண்டு காவலர்களை வைத்து சாப்பிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதற்கு சாட்சி அந்த உணவகத்தில் இருக்கும் சிசிடிவிதான் எனக் குறிப்பிட்டு அவர் பெயர் தெரிய வேண்டும்' என பதிவிட்டுள்ளார்.
அடுத்த சில மணிநேரங்களிலேயே அவர் பெயர் ரோகித் விக் என கண்டுபிடித்து இஷா குப்தாவிற்கு ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அவரது புகைப்படத்துடன் பெயரை குறிப்பிட்டு பதிவிட்ட இஷா, ஒரு பெண்ணாக பிறந்தது சாபக்கேடா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், நடிகையாக பார்க்க வேண்டாம் நான் இருக்கும் இடத்தில் ஒரு சாதாரண பெண் நிலைமை என்ன? அவள் எப்படி உணர்வாள் என்றும் கூறியுள்ளார்.